பீமாவுக்குப் பிறகு தீவிர கதை விவாதத்தில் இருக்கும் லிங்குசாமி அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்குகிறார்.
முதல் படத்தில் பருத்திவீரன் கார்த்தி நடிக்கிறார். ஆயிரத்தில்¨ ஒருவன் தயாரானதும், கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இது முடிந்ததும் விஷாலை வைத்துப் படம் இயக்குகிறார் லிங்குசாமி. அனேகமாக இதை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.
லிங்குசாமியின் படம் முடிந்த பிறகே மிஷ்கின் படத்தில் நடிக்கிறார் விஷால்.