மாயக்கண்ணாடி தோல்வியிலிருந்து மீண்டுவிட்டார் சேரன். பொக்கிஷம், ஆட்டோகிராஃப்-2 என புதிய ப்ராஜெக்ட்களில் சேரன் பிஸி.
பொக்கிஷத்தை சேரனே இயக்கி நடிக்கிறார். இதனையடுத்து பால்யத்தின் நினைவுகளை மீட்டிய தனது ஆட்டோகிராஃபின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். சேரன், மல்லிகா, சினேகா, கனிகா என அதே நடிகர்கள். கோபிகா மட்டும் விதிவிலக்கு. கால்ஷீட் இல்லையென்று கைவிரித்துவிட்டாராம்.
ஆட்டோகிராஃப் மூலம் கோபிகாவை ஏணியில் ஏற்றிவிட்டவர் சேரன். எட்டி மிதித்த வலியை மறைத்து கோபிகா இல்லாமலே இரண்டாம் பாகத்தை கொண்டு வருவேன் என நம்பிக்கையுடன் மார்தட்டுகிறார் சேரன்.
ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.