தூய தமிழில் பாட்டே எழுது முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் படமே எடுத்தவர் சீமான். வாழ்த்துகள் காதல்¨ படம். தமிழில் எடுத்துவிட்டார். ஆங்கிலம் இல்லாமல் எப்படி ஆக்சன் படமெடுப்பார்?
வம்படியாக வார்த்தைகளை விடுபவர்களை தமிழாலே தாக்கப் போகிறாராம் சீமான். ஆம் சீமானின் அடுத்தப் படம் தம்பி போல அதிரடி பட்டாசாம்!
வாழ்த்துகளுக்கு முன்பே பகலவன் என்றொரு கதையை பக்காவாக தயார் செய்து வைத்திருந்தார் சீமான். அவரது சமூக கோபமே பகலவனின் கதை. நாயகன் முடிவாகவில்லை. ஆனால் கதையின் மொழி தூய தமிழ் என்பதில் உறுதியாக இருக்கிறார் சீமான்.
வரிச் சலுகைக்காக தமிழில் பெயர் வைத்து உப தலைப்பு என ஆங்கிலத்தில் வால் வைக்கும் கோடம்பாக்கத்தில், சந்தேகமேயில்லை... சீமான் கோமான்தான்!