பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு இன்று சென்னையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 71. 'வீர அபிமன்யு’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சோபன் பாபு. இவர் ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழ், கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளன.
தொடக்கம் முதலே சென்னையில் தங்கியிருந்த சோபன் பாபு யோகாசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்று காலை யோகாசனத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டது.
உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோபன் பாபு இறந்தார்.
சோபன் பாபுவின் மறைவு குறித்து தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகினரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளன.
ஆந்திர அரசின் நந்தி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சோபன் பாபு, தெலுங்கில் 275 படங்கள் நடித்துள்ளார்.