மரத்தைச் சுற்றி டூயட் பாடி சினேகாவுக்கு அலுத்துவிட்டதாம். சேலஞ்ச் ஆக ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு தோதாக சினேகா தேர்ந்தெடுத்திருப்பது சினிமா தயாரிப்பு.
நடிப்புடன் விளம்பரம், ரியல் எஸ்டேட், சொந்த ஊரில் திருமண மண்டபம் என சினேகாவின் சொத்து அஸ்திவாரம் இப்போதே ஸ்ட்ராங்க். இதில் கூடுதல் பலமாக விரைவில் சொந்த படக்கம்பெனி தொடங்கவுள்ளார்.
குழந்தைகள், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே இவரது படக்கம்பெனி தயாரிக்குமாம். கம்பெனி பொறுப்பை சகோதரியிடம் ஒப்படைத்து, வழக்கம்போல நடிப்பை தொடர்வாராம் சினேகா.
படமெடுப்பது பாம்புகளுக்கே கடினமாகி வரும் சூழலில் சினேகாவின் துணிச்சலுக்கு வைக்கலாம் ஒரு சலாம்!