Publish Date: Wed, 19 Mar 2008 (16:39 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (16:30 IST)
பிரச்சனைக்குரிய படம் இயக்குவதில் பெண்களுக்கே முதலிடம். தீபா மேத்தாவின் ·பயர், மீரா நாயரின் காமசூத்ரா சின்ன சாம்ப்பிள்கள். இயக்குனர் மதுமிதாவுக்கும் கொடுக்கலாம் இவர்களில் ஓர் இடம்!
இவரது வல்லமை தாராயோ படத்தில் பார்த்திபனும், சாயாசிங்கும் கணவன், மனைவி. ஒருகட்டத்தில் மனைவி கணவனை பிரிகிறார். காரணம்?
காரணத்தை ஜீரணிக்க வல்லமை வேண்டும். கணவர் ரொம்ம்ம்ப நல்லவராக இருப்பதால் அவரை பிரிகிறார் சாயாசிங். கேட்கும்போதே பார்க்கத் தூண்டும் இந்தப் படத்தின் பாடல்களும் கேட்கும்படி இருக்குமாம். இசை பரத்வாஜ். ஏப்ரல் 5 ஆம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார்கள்.