Publish Date: Wed, 19 Mar 2008 (16:39 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (16:28 IST)
அவருக்கு எளிதில் யாரையும் பிடிக்காது. பிடித்தால் எளிதில் விடவும் மாட்டார். இயக்குனம் கெளதம் மேனனைதான் சொல்கிறோம்.
சமீரா ரெட்டியை எப்படியும் தமிழுக்கு கொண்டுவர வேண்டுமென கெளதம் விரும்பினார். வாரணம் ஆயிரத்தில் விருப்பம் நிறைவேறியது. சமீராவிடம் அழகும் இருக்கிறது. திறமையும் இருக்கிறது. ஒரு படத்துடன் விடுவானேன் என்று தனது அடுத்தப் படத்திலும் சமீராவுக்கு சிபாரிசு செய்தார் கெளதம்.
வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கெளதம். தயாரிப்பு சிவாஜி புரொடக்ஷன்ஸ¤ம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளனர்.
முதல் படம் சூர்யாவுடன், இரண்டாவது அஜித்துடன். பூரித்துப் போயிருக்கிறார் சமீரா ரெட்டி!