Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குருவியை முந்தியது கந்தசாமி!

Advertiesment
குருவியை முந்தியது கந்தசாமி!
, வியாழன், 20 மார்ச் 2008 (12:36 IST)
webdunia photoWD
ஐம்பது சதவீத படப்பிடிப்யே முடிந்திருக்கிறது. அதற்குள் கந்தசாமியை வாங்க கோடிகளுடன் க்யூ நிற்கிறது விநியோகதஸ்தர் கூட்டம்.

பிரமாண்டமான தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் பலத்த வரவேற்பு. சிவாஜியின் கேரள விநியோக உரிமை இரண்டரை கோடிக்கு வாங்கப்பட்டது. அதேயளவு பணம் கொடுத்து கமலின் பத்து வேட தசாவதாரத்தை வாங்கியுள்ளது லால் கிரியேஷன்ஸ்.

விஜயின் குருவிக்கு ஒன்றரை கோடி. படப்பிடிப்பில் இருக்கும் சுசி. கணேசனின் கந்தசாமியின் கேரள விநியோக உரிமை இரண்டு கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. விக்ரமின் சாமி, அந்நியன் படங்களின் உரிமையை வாங்கிய சிபு, கந்தசாமி உரிமையையும் வாங்கியிருக்கிறார்.

விக்ரமின் நடிப்பு, ஸ்ரேயாவின் கிளாமர், சுசி. கணேசனின் ஸ்டைலிஷான இயக்கம், தாணுவின் பிரமாண்ட பட்ஜெட்... போட்டதை கண்டிப்பாக எடுத்திடுவேன்! நம்பிக்யோடு சொல்கிறார் சிபு.

Share this Story:

Follow Webdunia tamil