இயக்குவது தரணி, நடிப்பது விஜய். இதற்குமேல் வினியோகஸ்தர்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. கோடிகளை கொடுத்து குருவியை வாங்கிச் செல்கிறார்கள்.
இரண்டு நாள் முன்பு குருவியின் கேரள வினியோக உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனையானது. கேரளாவில் தமிழர்கள் அதிகம். தமிழ்ப்படம் பார்க்கும் மலையாளிகளும் அதிகம். அதனால் ஒன்றரை கோடியில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால். கர்நாடகா?
தமிழ்த் திரைப்படங்களை திரையிட்டாலே தீவட்டியுடன் திமு திமுசென ஒரு கூட்டம் திரையரங்கை முற்றுகையிடும். இப்படியொரு தீவிரவாத சூழல் இருக்கம் கர்நாடகாவில் குருவி வினியோக உரிமை 1.2 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.
பெயர்தான் குருவி. பிஸினசில் பருந்து!