கிரீடம் விஜய் இயக்கிய பொய் சொல்லப் போறோம் ஏப்ரலில் வெளியாகிறது. காமெடி கதையான இதனைத் தொடர்ந்து காதல் கதையை இயக்குகிறார்.
செம்பட்டை முடியும், செக்க சிவந்த பல்லுமாக அழுக்கு கேரக்டரில் நடித்து வரும் ஜீவா, விஜய்யின் புதிய படத்தின் நாயகன். கல்லூரி காதல் கதை என்பதால் தனது ஒரிஜினல் முகத்துடன் நடிக்கிறார். அழுக்கு உடைக்கும், ஆக்ரோச நடிப்புக்கும் தற்காலிக விடுப்பு.
ஜெமினி பிலிம்ஸ் படத்தை இயக்குகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசை, தெலுங்கில் வெற்றி பெற்ற ஆரியா படத்தின் ரீ-மேக் உரிமையை ஜெமினி பிலிம்ஸ் வாங்கியுள்ளது. ஆனால் ஜீவா நடிக்கும் படம் அதன் ரீ-மேக் இல்லையென்றார் விஜய்.