நட்பை மறக்காத நடிகரின் கதை குசேலன். இதில் பசுபதிக்கு பார்பர் வேடம். அவரது பால்ய சினேகிதர், நடிகரான ரஜினிகாந்த்.
பார்பர் வேலையை பஸ் கண்டக்டர் அல்லது பஸ் டிரைவராக மாற்ற முடியுமா என பி.வாசுவிடம் கேட்டிருக்கிறார் ரஜினி. அவரது ஆரம்ப காலத்தில் பணம் கொடுத்து உதவியது பஸ் டிரைவராக இருந்த அவரது நண்பர்தான்.
கடைசி நேரத்தில் வைத்த கோரிக்கை என்பதால் ரஜினியின் ஆசை நிறைவேறவில்லை. பார்பராகவே நடிக்கிறார் பசுபதி.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மார்க்கெட் செட் அமைத்து பசுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. தெலுங்கு குசேலுரு தொடக்க விழாவில் கலந்து கொண்ட ரஜினியை வைத்தும் சில காட்சிகள் இயக்கினார் வாசு.
ரஜினி, நயன்தாரா இடம் பெறும் பாடல் காட்சி ஒன்றும் விரைவில் படமாக்கப்பட உள்ளது.