தாம் தூம் நாயகி கங்கனா ரனவத். பாலிவுட்டின் பிஸி நடிகை. கங்கனாவுக்கும் ஜெயம் ரவிக்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பி விரைவிலேயே பிசுபிசுத்தது.
ஆனால் இதுவல்ல விவகாரம். தனது கார் டிரைவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார் கங்கனா. இது குறித்து கார் டிரைவர் ராஜேஷ் கூறியதாவது:
கங்கனாவும், அவரது அக்கா ரங்கோலியும் காரில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட்டுக்டு போ என்றனர். எந்த ஷூட்டிங் ஸ்பாட் என்று கேட்டேன். நீயே கண்டுபிடி என்றவர், மீண்டும் எந்த இடத்துக்கு போக வேண்டும் என்று கேட்டதும் கன்னத்தில் அறைந்தார்.
அறை வாங்கியதோடு வேலையில் இருந்து நின்று விட்டார் ராஜேஷ். ஆனால், தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வருகிறதாம்.
கார் டிரைவரை கங்கனா ஏன் மிரட்ட வேண்டும்? அதற்கு அவசியமேயில்லை என ராஜேஷின் குற்றச்சாற்றை மறுக்கிறது கங்கனா தரப்பு.
அதே நேரம் போலீசுக்கும் போகப் போவதாக கூறியிருக்கிறார் ராஜேஷ். போலீசின் விசாரணையில் உண்மை வெளிப்படலாம்.