Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி வழியில் நயன்தாரா!

Advertiesment
ரஜினி வழியில் நயன்தாரா!
, செவ்வாய், 18 மார்ச் 2008 (13:52 IST)
webdunia photoWD
யார் தொடங்கி வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் நயன்தாரா அதனை தொடர்கிறார். படம் முடிந்து பூசணிக்காய் உடைக்கும் நாளில், படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகள் கிடைக்கும். நடிகர்களைப் பொறுத்து பரிசு உடை, கடிகாரம், பணம் எதுவாகவும் இருக்கும். ரஜினி படமென்றால் அதிர்ஷ்டம் தங்க ஆபரணமாகவும் வரும். தங்கமோ கரன்சியோ, ரஜினி படமென்றால் பரிசு நிச்சயம்.

ரஜினி வழியில் நயன்தாராவும் பரிசு வழங்குவதை பழக்கமாக்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்த யாரடி நீ மோகினியின் கடைசி நாளில் ஆளுக்கொரு கவர் கொடுத்தார் நயன்தாரா. கவருக்குள்ளே ஆயிரம் ரூபாய்.

கவர்ச்சியோ, காசோ... கொடுத்து மகிழும் குணம் நயன்தாராவுக்கு!

Share this Story:

Follow Webdunia tamil