கோடம்பாக்கத்தில் கதைக்குப் பஞ்சம். அதைவிட கதாநாயகிக்கு பஞ்சம். கால்ஷீட் கொடுக்கிற நடிகைகளும் கிடைக்கிற கேப்பில் ஒழுகிப் போகிறார்கள்.
ஹரியின் சேவலில் பரத் ஜோடியாக நடிக்க பானு, நயன்தாரா மாதிரி அம்சமான நடிகை தேவை. அலசி ஆராய்ந்து பாமாவை பிடித்தார்கள். எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்துவரும் கேரள வரவான பாமா, பானு, நயன்தாராவுக்கு நேரெதிர். பாடல் காட்சியிலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கச்சையை இறுக்க, ரிஸ்க் எடுக்க விரும்பாத ஹரி வேறு ஹீரோயின் தேடினார்.
இப்போது புது ஹீரோயின் கிடைத்துவிட்டதாகக் கேள்வி. லண்டன் தமிழ்ப் பெண்ணாம். ஃபோட்டோசெஷன் நடத்திய பிறகே ஃபோட்டோவை கண்ணில் காட்டுவாராம்.