கொல்லப்புடி மாருதி ராவின் மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ், இயக்குனரான இவர் விபத்தொன்றில் மரணமடைந்தார். அவரது நினைவாக கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருதை கடந்த பதினொன்று வருடங்களாக அளித்து வருகிறார் மாருதிராவ்.
சிறந்த இயக்குனருக்கு அளிக்கப்படும் இந்த விருதை நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். தாரே ஜமீன் பர் படத்துக்காக அமீர் கான் இந்த வருட சிறந்த இயக்குனர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கீதம் சீனிவாசராவ், கல்யாணராமன் மற்றும் மாருதி ராவ் அடங்கிய தேர்வுக் குழு பத்தொன்பது போட்டியாளர்களிலிருந்து அமீர் கானை தேர்வு செய்துள்ளது.
ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதை அமீர் கான் பெற்றுக்கொள்கிறார்.