Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலுக்கு அடத்த இடத்தில் விஜய்!

Advertiesment
தசாவதாரம் விஜய் கேரளா போக்கிரி
, சனி, 15 மார்ச் 2008 (17:59 IST)
சில நாட்கள் முன்பு கமலின் தசாவதாரம் படத்தின் கேரள வினியோக உரிமை இரண்டரைக் கோடிக்கு விற்கப்பட்டது. இப்போது விஜயின் முறை.

கேரளாவில் விஜய் ஒரு குட்டி சூப்பர் ஸ்டார். தமிழில் அவர் படம் சுமாராக ஓடினால், கேரளாவில் அதே படம் றெக்கை கட்டி பறக்கும். அவரது 'போக்கிரி' போட்ட போடில் அங்குள்ள சூப்பர் ஸ்டார்களே பொறி கலங்கிவிட்டனர்.

விஜயின் குருவி படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதற்குள் பர்சேஸ் சூடு பிடித்திருக்கிறது. கேரள வினியோக உரிமை ஏலத்தொகை போல உயர்ந்து ஒன்றரை கோடியை தொட்டிருக்கிறது. ஒன்றரை கோடி கொடுத்து குருவியின் கேரள வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் மகி.

ஒன்றரை கோடி என்பது மலையாள படமொன்றின் ஒட்டுமொத்த பட்ஜெட். குருவியின் விலையப் பார்த்து, அதிர்ந்து போயிருக்கிறது மலையாள படவுலகம்.

Share this Story:

Follow Webdunia tamil