Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்கேப்பான எஸ்.எம்.எஸ்.!

Advertiesment
எஸ்கேப்பான எஸ்.எம்.எஸ்.!
, சனி, 15 மார்ச் 2008 (17:55 IST)
ஜெயமோகனின் சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதால் ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள். முக்கியமாக நடிகர் சங்கம். மன்னிப்பு கேட்கவில்லையெனில், விகடன் சம்பந்தப்பட்ட எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என்று ஒரு வாரம் கெடுவும் விதித்தது.

விகடம் நிறுவனம் இப்போதுதான் தனது முதல் படமான சிவா மனசுல சக்தியை தொடங்கியிருக்கிறது. நடிகர் சங்கம் ஒத்துழைக்க மறுத்தால் ஒரு அடி படத்தைக் கூட எடுக்க முடியாது.

இந்நிலையில், கட்டுரையை பிரசுரித்ததற்கு விகடம் வருத்தம் தெரிவித்துள்ளது. பாரம்பரிமிக்க விகடன் வருத்தம் தெரிவித்தது மன்னிப்பு கேட்ட மாதிரிதான் என்று நடிகர் சங்கத்தினரும் சமாதானம் அடைந்துள்ளனர். சிவா மனசுல சக்தியும் பிரச்சனையிலிருந்து எஸ்கேப்பாகியுள்ளது.

ஜெயமோகன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. மன்னிப்பு விஷயத்தில் ஜெயமோகன் விஜயகாந்த் கட்சி. தமிழில் ஜெயமோகனுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதானாம்!

Share this Story:

Follow Webdunia tamil