Publish Date: Sat, 15 Mar 2008 (18:19 IST)
Updated Date: Sat, 15 Mar 2008 (18:19 IST)
கண் பட்டதா? இல்லை சொல் பட்டதா? இசையும் ஸ்வரமும் போலிருந்த செல்வராகவன் - யுவன் நட்பில் அபஸ்வரம். நான்கு படங்களில் தொடர்ந்த இவர்கள் கூட்டணி ஆயிரத்தில் ஒருவனில் ஆட்டம் கண்டுள்ளது.
துள்ளுவதோ இளமை முதல் செல்வராகவன் படங்களில் யுவன்தான் இசை. அரவிந்த் கிருஷ்ணாதான் ஒளிப்பதிவு. செல்வா - அரவிந்த் கிருஷ்ணா நட்பில் விரிசல் விழ, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு கதவு அடைக்கப்பட்டது.
இப்போது யுவனையும் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார் செல்வராகவன். அவருக்குப் பதில் ஒப்பந்தமாகியிருப்பவர் ஜி.வி. பிரகாஷ்குமார்.
செல்வராகவன் படமென்றால் பாடல் நா. முத்துக்குமார்தான். செல்வாவுக்கு என்ன கோபமோ. முத்துக்குமாருக்கும் ஆயிரத்தில் ஒருவனில் இடமில்லை. வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.
வெற்றிக் கூட்டணி உடைந்ததில் சுற்றி இருப்பவர்களுக்கும் ஏக வருத்தம்!