குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை தனது வீட்டில் எளிமையாக கொண்டாடினார் அஜித். இந்த விழாவில் அஜித் - ஷாலினி குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
அஜித் மனைவி ஷாலினிக்கு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டவில்லை. நேற்று அஜித்தின் திருவான்மியூர் வீட்டில் நடந்த விழாவில் அனோஸ்கா என்று குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டது. அனோஸ்கா என்றால் கனவுகளை நிறைவேற்றுபவள் என்று அர்த்தமாம் (எந்த மொழியில்?).
அஜித் தனது குழந்தையின் புகைப்படத்தை பத்திரிக்கைகளுக்கு தருவதாக இருந்தார். குழந்தையின் படம் பத்திரிக்கைகளில் வருவது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என விஜய் தடுத்ததால், தனது எண்ணத்தை அஜித் மாற்றிக் கொண்டார்.
நேற்று நடந்த விழாவிற்கும் பத்திரிக்கையாளர்கள் எவரும் அழைக்கப்படவில்லை.