Publish Date: Sat, 15 Mar 2008 (16:13 IST)
Updated Date: Sat, 15 Mar 2008 (16:13 IST)
'வில்' படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே. சூர்யா அடுத்து அறிமுக இயக்குனர் தாய்செல்வம் இயக்கத்தில் நடிக்கிறார்.
தாய் செல்வம் பெரிய திரைக்குதான் புதுசு. சின்னத்திரையில் வெளியான காத்து கருப்பு சீரியல் இவரது கைவண்ணம்தான். 'மச்சக்காரன்' படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
படத்துக்கு இசை ஏ.பி. வினய், கேமரா சரவணன், எடிட்டிங் கோபி.
இந்த மூவருமே செல்வத்துடன் காத்து கருப்பு சீரியலில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். மூவருக்குமே இதுதான் முதல் சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.