'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படம் இயக்குகிறார் சுரேஷ் கிருஷ்ணா. ஆக் ஷன் கதையான இதில் பரத் நடிக்கிறார்.
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு', 'நோபாளி' படங்களில் நடித்து வரும் பரத், மே மாதம் முதல் ஹரியின் 'சேவல்' படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். சேவலுக்கு அடுத்து பரத் நடிப்பது சுரேஷ் கிருஷ்ணாவின் படமாக இருக்கும்.
படத்துக்கு 'ஆறுமுகம்' என பெயரிட்டுள்ளனர். கதாநாயகி, டெக்னிஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.