நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்த வெனிஸ் நகரம், உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. த்ரிஷாவுக்கு பிடித்த நகரம் என்பதால் வெனிஸ் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்பு பேட்டியொன்றில் கல்யாணம் முடிந்து ஹனிமூனுக்கு வெனிஸ் செல்ல விரும்புவதாகக் கூறினார் த்ரிஷா.
தற்போது பூரி ஜெகன்னாத்தின் 'புஜ்ஜிகாரு' படத்தில் நடித்துவரும் த்ரிஷா, உடன் நடிக்கும் பிரபாஸுடன் விரைவில் வெனிஸ் செல்கிறார். அங்கு இருவரும் இடம்பெறும் பாடல்காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது.
ஏற்கனவே 'எனக்கு 20 உனக்கு 18' படத்துக்காக த்ரிஷா வெனிஸ் சென்றுள்ளார். புஜ்ஜிகாருவுக்காக செல்வது இரண்டாவது முறை.
மூன்றாவது எப்போது?