தாரே ஜமீன் பர் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்ற அமீர்கானின் கோரிக்கையை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் சேரன். இரண்டு காரணங்கள். ஒன்று, அமீர்கான் விரும்பிய சூர்யா, விக்ரம் இருவரும் வேறு படங்களில் பிஸி. இரண்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சேரன் இயக்கும் பொக்கிஷம் படம்.
சேரனே பொக்கிஷத்தை இயக்கி நடிக்கிறார். அஞ்சாதே படத்தை தயாரித்த நேமிசந்த் ஜெபக், இதேஷ் ஜெபக் தயாரிப்பு. இசை, சபேஷ் முரளி. ஹீரோயின் பத்மப் பரியா. பாடல் கம்போஸிங் தொடங்கிவிட்ட நிலையில் தாரே ஜமீன் பர் ரீ-மேக்கில் கவனம் செலுத்த முடியாத நிலை. பொக்கிஷம் முடிந்த பிறகு சேரன் அமீரின் ஆசையை பூர்த்தி செய்யலாம்.
அடுத்த மாதம் பொக்கிஷம் படப்பிடிப்பு தொடங்குகிறது.