இயக்குனர் மு.களஞ்சியத்தின் கதாநாயகி வேட்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. களஞ்சியத்தின் 'என் கனவு நீ தானடி' படத்தில் அவரது ஜோடியாக நடிக்க முன் வந்திருக்கிறார் ஒரு நடிகை.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நடிப்பதாக இருந்த 'கலகம்' கைவிடப்பட்டதால், கலகத்தை இயக்குவதாக இருந்த களஞ்சியம், 'என் கனவு நீதானடி' என்ற புதிய படத்தை தொடங்கினார். காதல் கதையான இதில் களஞ்சியமே ஹீரோ. ஹீரோயினாக நடிக்க பத்ம ப்ரியா, பூமிகா என்று பலரை முயன்றார். முயற்சி திருவினையாவில்லை.
கையறு நிலையில் இருந்தவருக்கு கை கொடுத்திருக்கிறார் கற்றது தமிழ் அஞ்சலி. அஞ்சலி சினிமாவில் நடிக்க களஞ்சியம் ஒரு காரணமாம். அஞ்சலி கால்ஷீட் கொடுக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
எப்படியோ, களஞ்சியத்தின் கனவுக்கு ஒரு கதாநாயகி கிடைத்து விட்டார்.