இது தோட்டா ஜீவன் அல்ல. மயிலு ஜீவன். டூயட் மூவிசுக்காக மயிலு படத்தை இயக்கும் ஜீவன் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர்.
வழக்கமாக ஒளிப்பதிவாளர்கள் இயக்குனரானால் மீண்டும் ஒளிப்பதிவுக்கே திரும்பி விடுவார்கள். ஆனால், ஜீவன் விஷயம் வேறு. 'மயிலு' முடியும் முன்பே, டூயட் மூவிசுக்காக மேலுமொரு படம் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தின் பெயர் 'சத்யராஜ்'.
கைவசம் இரண்டு படங்கள் இருந்தாலும், ஸெல்வன் இயக்கும் 'கிருஷ்ண லீலை' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக் கொண்டுள்ளார் ஜீவன். ஸெல்வனின் 'சூரி' படத்தின் மூலம்தான் ஜீவன் ஒளிப்பதிவாளரானார். அந்த நன்றிக் கடனுக்காகதான் 'கிருஷ்ணலீலை'க்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறார்.
கோடம்பாக்கத்தை விட்டு நன்றி எனும் வார்த்தை இன்னும் ஓடிவிடவில்லை.