Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எளிமையாக நடந்த எங்கள் ஆசான் தொடக்க விழா!

Advertiesment
எளிமையாக நடந்த எங்கள் ஆசான் தொடக்க விழா!
, வியாழன், 13 மார்ச் 2008 (20:05 IST)
சினிமா புகழில் கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த். சினிமா காசில்தான் கட்சியை நடத்துகிறார். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறாம். இதைச் சொன்னவர் விஜயகாந்த். சொன்ன இடம் ஏவி.எம். ஸ்டுடியோ.

நேற்று எங்கள் ஆசான் தொடக்க விழா மனைவி பிரேமலதா சகிதம் விழாவில் கலந்துகொண்டார் விஜயகாந்த். தயாரிப்பளார் தங்கராஜும், இயக்குனர் கலைமணியும் இருவரையும் வரவேற்றனர். எளிமையாக நடந்த சடங்கு சம்பிரதாயங்களுக்குப் பிறகு பேசினார் விஜயகாந்த்.

அரசியலையும் சினிமாவையும் நான் பிரித்துப் பார்க்கிறேன். சினிமாவில் அரசியலை புகுத்துவது இல்லை. படங்களில் நான் பேசும் வசனங்கள் பொதுப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருக்கும். ஆனால், அதற்கு அரசியல் சாயம் பூசிவிடுகிறார்கள் என்றார்.

ஜெயமோகன் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் கிண்டல் செய்தது குறித்து கேட்டதற்கு, ஜெயமோகனின் கட்டுரையை படிக்கவில்லை என்று பதிலளித்தவர், இறந்தவர்களை இழிவுப்படுத்தக்கூடாது என்று மட்டும் சொல்லி நழுவிக் கொண்டார்.

எங்கள் ஆசானுக்குப் பிறகு இயக்குனர் செல்வா இயக்கத்தில் நடிக்கிறார் விஜயகாந்த். அதற்குப் பிறகு லஷ்மி மூவிமேக்கர்¤க்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இயக்குனர் முடிவாகவில்லை.

எங்கள் ஆசான் பற்றி சொல்லும் போது, இதில் எனக்கு வங்கி அதிகாரி வேடம். அரசாங்கம் போலவே இதிலும் இரண்டு ஹீரோயின்கள் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil