அதிரடியான ஓபனிங் என்று சொல்ல முடியாது. ஆனால், தமிழகம் முழுவதும் கெளரவமான ஓபனிங் கிடைத்திருக்கிறது விஜியின் வெள்ளித்திரைக்கு!
சென்னையில் முதல் மூன்று தினங்களில் 16 லட்சங்கள் வசூலித்துள்ளது பிரகாஷ்ராஜின் இந்தப் படம்.
ஊட்டியில் அபியும் நா¨னும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ், கோவை காவேரி திரையரங்கில் ரசிகர்களுடன் வெள்ளித்திரையை பார்த்து மகிழ்ந்தார். படம் முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்தவர், ரசிகர்கள் படத்தை ரசித்து பார்த்ததாகவும், இதுபோன்ற தரமான படங்களை மட்டுமே எனது டூயட் மூவிஸ் தயாரிக்கும் என்றும் கூறினார்.
சென்னை வார இறுதி வசூலில் அஞ்சாதேயை பின்னுக்குத் தள்ளி வெள்ளித்திரை முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.