கதாநாயகி விஷயத்தில் சிம்பு ரொம்ப கறார். யார் எப்போது மாற்றப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது.
கெட்டவன் படப்பிடிப்பு தொடங்கி பலநாள் கழிந்த பிறகு லேகா வாஷிங்டன் மாற்றப்பட்டார். சிம்பு சொன்ன காரணம், லேகாவுக்கு நடிக்க தெரியவில்லை.
லேகா பராவாயில்லை, காஜல் நிலைமை இன்னும் மோசம். காரணம் சொல்லாமலே காஜல் அகர்வால் சிம்புவின் சிலம்பாட்டம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிலம்பாட்டத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ஷானாகான். பிளாஷ்பேக் காட்சியில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். சிம்புவுடன் நடிக்கிறேன் என சிலிர்த்துக் கொண்டு திரிந்தார் காஜல்.
துரதிர்ஷ்டமாக இப்போது காஜலை நீக்கி விட்டு சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். காளை படத்தில் சங்கீதாவுக்குப் பதில் சினேகாவைத்தான் நடிக்க வைக்க விரும்பினார் சிம்பு. வில்லங்கமான அத்தையாக நடித்தால் விவகாரமாகிவிடும் என காளை வாய்ப்பை உதறினார் சினேகா.
காளையில் கழண்டு கொண்ட அவர் சிலம்பாட்டத்தில் சிக்கியிருக்கிறார். தற்போது சிலம்பாட்டத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.