Publish Date: Thu, 13 Mar 2008 (19:51 IST)
Updated Date: Thu, 13 Mar 2008 (19:51 IST)
ஷாம், சினேகா நடித்திருக்கும் படம் இன்பா. ரத்னமாலா மூவிஸ் இன்பாவை தயாரித்திருக்கிறது. வேந்தன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.
படப்பிடிப்பில் இருந்தபோதே இன்பா பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள். இதுவரை இல்லாத அளவிற்கு சினேகா பாடல் காட்சிகளில் தாராளம் காண்பித்திருக்கிறார் என்பது அதில் ஒன்று.
சுபா வசனம் எழுதியிருக்கும் இந்தப் படத்திற்கு இசை சி.பி. பாலாஜி. இன்பாவில் ஷாம் ஆட்டோ டிரைவராகவும், சினேகா கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளனர்.
மார்ச் 21 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.