பிரச்சினை வந்தால் மோதிபார்ப்பது ஒருவகை. ஒதுங்கிப்போவது இன்னொரு வகை. எட்டப்பன் டீம் இரண்டாவது ரகம்.
எட்டப்பன் படத்தின் கதை எங்கள் வம்சத்தின் பெருமையை குலைக்கும் வகையில் உள்ளது. அதனால் ஸ்ரீகாந்த், சினேகா நடிக்கும் எட்டப்பன் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என எட்டப்பன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
பெயரைத்தானே மாற்ற வேண்டும்? இதோ மாற்றுகிறோம் என இயக்குனர் வித்யாரதன் வேலு பெயரை தேடத் தொடங்கினார். கடையிசியில் அகப்பட்ட பெயர், இது திருடிய கதை!
அமங்கலமாக இருப்பது போல் தோன்றுமே? இது திருடிய கதை பெயருக்குக் கீழே அவள் உள்ளத்தை என்று சப்-டைட்டிலும் உண்டு.
புரிந்துகொள்ள சிரமமாக இருந்தால் பெயரை மாற்ற இயக்குனர் தயாராகவே இருக்கிறார்.