இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஹீரோவாக நடித்ததால் வடிவேலுவின் கைநழுவிப் போன வாய்ப்புகள் ஏராளம். அதில் ஒன்று குருவி.
இந்திரலோகம் வெளிவந்த நிலையில் மீண்டும் காமெடி வேடங்களில் வடிவேலு பிஸி. விரைவில் இவர் நடித்த கி.மு. வெளிவருகிறது. இந்தப் படம் பழைய பெயரை மீட்டுத்தரும் என நம்புகிறார் வடிவேலு.
இந்திரலோகத்துக்குப் பிறகு காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படங்களில் நடித்து வருகிறவர், குசேலனில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
விஜயின் குருவியில் நடிக்கவும் வடிவேலுக்கு விருப்பம் உள்ளது. விஜய் - வடிவேலு காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால், படத்தில் வடிவேலை நடிக்க வைக்கும் திட்டம் தளபதிக்கும் உள்ளதாம்.
விரைவில் நல்ல அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள் குருவி யூனிட்டில்.