குழந்தைகளின் படத்தை பத்திரிக்கைகளுக்கு தருவதில்லை என்பதில் இளயை தளபதி கறாராக இருக்கிறார். பத்திரிக்கைகளில் குழந்தைகளின் புகைப்படம் பிரசுரமாவதை தவிர்ப்பதற்காக, பொது நிகழ்ச்சிகளுக்குக் கூட அவர்களை அழைத்து வருவதில்லை.
அதையும் மீறி சில வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றப் பத்திரிக்கையொன்று விஜய் மகனின் பிறந்தநாள் படத்தை பிரசுரித்தது. டென்ஷனான விஜய், சம்பந்தப்பட்ட பத்திரிக்கை விர்வாகத்திடமிருந்து மகனின் புகைப்படத்தை வாங்கிய பிறகே ஓய்ந்தார்.
அஜித் இவருக்கு நேர் எதிர். தனது மகளின் புகைப்படத்தை பத்திரிக்கைகளுக்கு தர தலக்கு விருப்பம்தான். இதனை கேள்விப்பட்ட விஜய் அவரை தடுத்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அது இடைஞ்சலாகிவிடும் என்று கூறியது அஜித்துக்கும் சரி என்றுபட, தனது முடிவை மாற்றியுள்ளார்.
ஹாலிவுட்டில் குழந்தைகளின் படத்தை பணத்திற்கு விற்கிறார்கள். கோலிவுட்டில் நிலைமை வேறு விதம். கலாச்சார வித்தியாசம்?