Publish Date: Wed, 12 Mar 2008 (20:06 IST)
Updated Date: Wed, 12 Mar 2008 (20:06 IST)
புதுமுகங்களை வைத்து படம் எடுப்பது அதிகரித்துள்ளது. கே.வி. குகன் இயக்கும் இனிது இனிது, பாலாஜி சக்திவேலின் புதிய படம், வசந்தபாலனின் அங்காடித்தெரு, தாமிராவின் இரட்டைச் சதி என்று புதுமுகங்கள் நடிக்கும் படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்த ரோஷன் கிருஷ்ணாவின் முதல் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. டீன் ஏஜ் கதையான இதில் நடிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். நூற்றுக்கணக்கில் புதுமுகங்கள் தேவைப்படும் கதையாம் இது.
இதனால் புதுமுகங்கள் வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளது திருப்பதி பிரதர்ஸ்.