கஜினியில் ஒன்றிணைந்த சூர்யா - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது.
இந்தியில் கஜினியை ரீ-மேக் செய்துவரும் முருகதாஸ் அடுத்து தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கான கதை ரெடி. படத்தில் நடிக்க முருகதாஸின் சாய்ஸ் சூர்யா.
கதையைக் கேட்ட சூர்யா உடனே தனது சம்மதத்தை தெரிவித்தார். இந்தப் படம் ஏ.ஆர். முருகதாஸின் சொந்த தயாரிப்பாக இருக்கும்.