Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ். ராமகிருஷ்ணன் வசனத்தில் மோதி விளையாடு!

எஸ். ராமகிருஷ்ணன் வசனத்தில் மோதி விளையாடு!
, புதன், 12 மார்ச் 2008 (20:02 IST)
வசந்தபாலனின் ஆல்பம் படத்தில் வசனம் எழுதி சினிமாவில் தனது கணக்கை துவங்கிய எஸ். ராமகிருஷ்ணன் கைவசம் இப்போது நிறைய படங்கள்.

பாபா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே என தொடர்ச்சியாக வசனம் எழுதிவரும் எஸ். ராமகிருஷ்ணன் தாம்தூம் படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார்.

அஜித் நடிப்பில் ராஜு சுந்தரம் இயக்கும் ஏகன் படத்துக்கும் இவரே வசனம். கதையில் சில திருத்தங்கள் செய்ய எஸ். ராமகிருஷ்ணனை வெளிநாடு அழைத்துச் சென்று விவாதம் நடத்தினார் அஜித்.

சரண் இயக்கத்தில் வினய் நடிக்கும் முரளி மனோகரின் மோதி விளையாடு படத்துக்கும் ராமகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார். மணிரத்னம் படத்தின் கதை விவாதத்திலும் ராமகிருஷ்ணன் கலந்துகொள்வது கூடுதல் செய்தி.

Share this Story:

Follow Webdunia tamil