ஐ.வி. சசி மலையாளத்தின் முன்னணி இயக்குனர. சில நாட்கள் முன்பு மிஷ்கினின் அஞ்சாதே திரைப்படத்தை தனது மனைவியும், நடிகையுமான சீமாவுடன் சென்னை ஃபோர் ஃபிரேம் பிரிவியூ திரையரங்கில் பார்த்து ரசித்தார் ஐ.வி. சசி.
இந்த ஸ்பெஷல் திரையிடலின் போது அஞ்சாதேயில் நடித்த நரேனும் உடனிருந்தார். படத்தைப் பார்த்த ஐ.வி. சசி, நரேனையும், இயக்குனர் மிஷ்கினையும் வெகுவாகப் பாராட்டினார்.
நடிகர் விஜயும், அவரது மனைவி சங்கீதாவும், நடிகை நயன்தாராவும் இந்த திரையிடலின் போது ஐ.வி. சசியுடன் படத்தைப் பார்த்து ரசித்தனர்.