Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலா படத்துக்கு சிக்கல்!

Advertiesment
பாலா நான் கடவுள் ஜெயமோகன்
, செவ்வாய், 11 மார்ச் 2008 (18:06 IST)
பாலாவின் நான் கடவுள், வசந்தபாலனின் அங்காடித் தெரு படங்களுக்கு புதிய சிக்கல். ஒரு வாரத்தில் நடிகர்களின் ஒத்துழைப்பு இந்தப் படங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

தொப்பி, திலகம் கட்டுரைகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தையால் வறுத்தெடுத்திருந்தார் ஜெயமோகன். இதனை பிரபல வார இதழ் ஒன்று வம்படியாக பிரசுரித்தது.

ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கத்தில் நடந்த அவசர கூட்டத்தில் ஜெயமோகனையும், வார இதழையும் வேண்டிய அவளவு திட்டித் தீர்த்தனர். பிரபல நடிகர் ஒருவர், ஜெயமோகனின் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்று தனது பகுத்தறிவை வெளிப்படுத்தினார்.

ஜெயமோகனும், வார இதழும் மன்னிப்பு கேட்க ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ஜெயமோகன், வார இதழ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது ஒருமனதான தீர்மானம்.

ஜெயமோகன் கலைஞரையே, அவர் இலக்கியவாதி இல்லை என்று விமர்சித்தவர். நடிகர்களின் கெடுவுக்கெல்லாம் அவர் காது கொடுக்கப் போவதில்லை. இதனால் ஜெயமோகன் வசனம் எழுதும் நான் கடவுள், அங்காடித் தெரு படங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், ஜெயமோகனுக்கு லாபம்தான்.

அதை வைத்து இன்னொரு கட்முரை எழுதுவார்!

Share this Story:

Follow Webdunia tamil