சினிமாவில் நடிகர்களுக்கு மட்டுமே புகழ். நூறுபடம் இயக்கிய இயக்குனருக்கு கிடைக்காத புகழ், நாலு படத்தில் நடித்த காமெடி நடிகருக்கு கிடைத்து விடும். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிப்பதற்கு ஆர்வம் காட்ட இதுவும் ஒரு காரணம்.
யுவன் ஷங்கர் ராஜாவை பலரும் நடிக்க அழைத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, தாணுவின் புன்னகைப் பூவே படத்தில் நடித்தார். அதுவும் பாடல் காட்சி. பாடிய படி தோள்களை அசைத்து இரண்டு ரவுண்ட் நடந்ததோடு சரி.
வெங்கட்பிரபு தனது 'சரோஜா’ படத்தில் யுவனுக்கு என்று சிறிய வேடம் ஒன்று வைத்திருக்கிறார். நழுவுகிற மீனான யுவன் நடிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். கேமரா முன் நிற்கும் வரை இளையராஜாவின் இளவலை நம்ப முடியாது.
நடித்தால் தமிழுக்கு இன்னொரு ஹீரோ கன்பார்ம்!