துரை படத்தில் காஸ்ட்யூமுக்கு என்று தனியாக சில லட்சங்கள் கேட்டார் பத்ம ப்ரியா. பட்ஜெட்டை மீறிய தொகை என்று தயாரிப்பாளர் தர மறுக்க, படத்தில் இருந்தே விலகினார்.
பொள்ளாச்சியில் நடைபெறும் ஷூட்டிங்கிற்கு உடனடியாக நாயகி தேவை. கொடுக்கிற காஸ்ட்யூமை போட்டு நடிக்க, வட்டாரம் கீரத் முன் வந்ததால் அவரையே கதாநாயகியாக்கி விட்டனர்.
படம் வெளிவந்த பிறகு, படத்தை தவற விட்டு விட்டோமே என்று பத்ம ப்ரியா வருத்தப்படுவார் என்றார் துரை யூனிட்டில் உள்ளவர். காரணம், அந்தளவுக்கு கிளாமரான வேடமாம்!