அமீர்கானுக்கு தமிழ் மீது திடீர் காதல். கஜினியை இந்தியில் ரீ-மேக் செய்யும் அதே நேரம் தனது படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவும் விரும்புகிறார்.
குழந்தைகளின் கற்றல் குறைபாடான டிஸ்லெக்சியாவை மையமாக வைத்து வெளியான 'தாரே ஜமின் பர்' தமிழ்நாட்டிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனை தமிழில் ரீ-மேக் செய்து வெளியிட விரும்புகிறார் அமீர்கான். ரீ-மேக் செய்ய நல்ல இயக்குனர் தேவை. அமீரின் விருப்பம் சேரன்.
அவர் ஒத்துக் கொண்டால் 'தாரே ஜமின் பர்' விரைவில் தமிழில் ரீ-மேக் செய்யப்படும். ரீ-மேக் படங்களை ஒத்துக் கொள்வாரா சேரன்?