சோனி நிறுவனம் தசாவதாரம் படத்தின் பாடல்களை 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருக்கிறது. அதாவது ஒரு ஆடியோ சி.டி.யின் விலை 99 ரூபாய்.
தாசரி நாராயணராவ் திரைக்கதையில் மூமைத்கான் கதாநாயகியாக நடித்த தெலுங்குப் படம் காயத்ரி ஐ.பி.எஸ். என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. அதன் ஆடியோ சி.டி.யின் விலை, நம்பினால் நம்புங்கள்... வெறும் 19.99 ரூபாய்! ரவுண்டாகச் சொன்னால் ரூபாய் இருபது. இதுவே ஆடியோ கேசட் என்றால், 15 ரூபாய் (14.99/-).
இது கட்டுப்படியாகுமா?
குறைவான விலைக்கு விற்கும்போது நிறைய பேர் வாங்குவார்கள், நஷ்டம் ஏற்பாது என்பது ஆடியோவை வெளியிடும் ஸீ ரெக்கார்ட்ஸின் எண்ணம்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி காயத்ரி ஐ.பி.எஸ். படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார்.