பிரமாண்டமாய்... மிகப் பிரமாண்டமாய் என்பார்களே, அப்படி இருக்கிறது சென்னை உஸ்மான் சாலையில் கம்பீரமாக உருவாகியிருக்கும், பிரசாந்த் ரியல் கோல்டு டவர். பதினாறு தளங்களை கொண்ட இந்த தங்க நகைக்கான ஷாப்பிங் சென்ட்டர் இந்தியாவிலேயே மிகப் பெரியது.
நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்துக்கு அளித்திருக்கும் இந்த மெகா பரிசு, உலகின் மிகச் சிறந்த ஷாப்பிங் சென்டர்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல தங்க நகை விற்பனையாளர்களான ஜாய் அலுகாஸ் ஐந்து தங்களில் தனது கடையை திறக்க உள்ளது. உலகின் மிகப் பெரிய தங்க நகைக் கடையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் ஏழு அதிசயங்கள் உண்டு. இந்த ஷாப்பிங் சென்டர் விரைவில் எட்டாவது அதிசமாயக மாறும் என்றார், தியாகராஜனின் 'தங்க மகன்' பிரசாந்த்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!