சீரியஸ் தயாரிப்பாளர்கள் வலையுடன் காத்திருக்கிறார்கள். பெரிய திரை பிரபலங்களில் யாருக்கு மார்க்கெட் டல்லானாலும், பாய்ந்து சென்று பிடித்து சீரியலில் நடிக்க வைத்து விடுகிறார்கள்.
தேவயானி, சுகன்யா, பானுப்பிரியா, கெளசல்யா, மீனா, குஷ்பு, சிம்ரன் என்ற நீண்ட பட்டியலில் மும்தாஜையும் சேர்க்க கடும் போட்டி. ஆனால், மும்தாஜ் இன்னும் பிடி கொடுக்கவில்லை. பெரிய திரையிலேயே இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம் என கனவு காண்கிறார்.
மும்தாஜ் கைவசம் இருக்கும் ஒரே படம் மைலா. ஒரே விதமான கேரக்டர்களில் நடித்து அலுத்துவிட்டது, மைலாவில் வித்தியாசமான வேடம். அதே மாதிரி சவாலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறார் மும்தாஜ்.
சவாலான வேடம்தானே... நாங்கள் தருகிறோம் என்கிறார்கள் சீரியஸ் தயாரிப்பாளர்கள். சிக்காமல் தப்பித்து வருகிறார் மும்தாஜ்.