மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா, தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு வருடங்கள் முன்பு நடித்தப் படம் 'தங்கத் தாமரை' சில்க் கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
பல காரணங்களால் தங்கத் தாமரை வெளியாகவில்லை. பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு படத்தை தூசு தட்டி வெளியிடும் முயற்சியில் இறங்கினார் தயாரிப்பாளர் திருப்பதி ராஜன்.
படத்தின் பேட்ஜ் வொர்க் முடிந்து படம் தணிக்கைக்கு போனது. அங்குதான் பிரச்சனை. தங்கத் தாமரையின் கதை சாதிப் பிரச்சனையை பின்னணியாகக் கொண்டது. பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் இந்தக் கதைக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால், இன்றுள்ள சூழலில் படத்தை வெளியிட்டால் சாதி மோதலுக்கு வழிவகுக்கும் என்று தணிக்கைக் குழு கருதுகிறது. அதனால் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தரமுடியாது என கறாராக கூறிவிட்டனர். இப்போது திருப்பதி ராஜன் வேறு வழிகள் யோசித்து வருகிறார்.
தங்கத் தாமரைக்கு வெள்ளித்திரை யோகம் இல்லை போலும்!