Publish Date: Tue, 04 Mar 2008 (20:15 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (20:15 IST)
இயக்குனராக ஆக்சன், கட் சொல்லிக் கொண்டிருந்த சுந்தர் சி-க்கு அரிதாரம் பூசி நடிக்க வைத்ததே குஷ்புதான். அவரே, சினிமாவில் ஆடக்கூடாது, தாவி குதிக்கக் கூடாது என்று சுந்தர் சி-க்கு தடா போட்டிருக்கிறார்.
காரணம்?
ரொம்ப சிம்பிள்! சமீபத்தில் சுந்தர் சி-க்கு குடல் வால்வு (அப்பண்டிசைடிஸ்) அறுவை சிகிச்சை நடந்தது. கொஞ்ச நாளைக்கு கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒரு நடிகனுக்கு கடினமான வேலையென்றால் அது ஹீரோயினை தூக்கி டூயட் பாடுவதும், சண்டைக் காட்சியில் குதிப்பதும்தானே! அதனால்தான் ஆடுவதற்கும், தாவுவதற்கும் சுந்தர் சி-க்கு தடா போட்டிருக்கிறார் குஷ்பு.
சுந்தர் சி நார்மலுக்கு திரும்பியதும் அவருடன் டூயட் பாட தயராக இருக்கிறார் நமீதா. சுந்தர் சி-யின் உடல்நிலை காரணமாகத்தான் பெருமாள் படத்துக்கு சுந்தர் சி, நமிதா ஆடும் பாடல் காட்சி எடுக்க தாமதமாகிறது என்கிறார்கள் பெருமாள் யூனிட்டில்!