அம்முவாகிய நான் படத்தில் பாரதி நடித்த பாலியல் தொழிலாளி வேடத்துக்கு நல்ல வரவேற்பு. முதலில் இந்த வேடத்தில் நடிக்க மறுத்த பலரும், படம் வெளிவந்த பிறகு, நல்ல வாய்ப்பை நழுவவிட்டோமே என்று வருந்தினர்.
தெலுங்கில் அம்முவாகிய நான் படத்தை ரீ-மேக் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க தயாரிப்பாளரின் சாய்ஸ் பாரதி. ஆனால் மீண்டும் அம்முவாக மாற பாரதிக்கு விருப்பமில்லை.
தொடர்ந்து ஒரே விதமான கேரக்டரில் நடித்தால் இமேஜ் பாதிக்கப்படும் என பயப்படுகிறார் பாரதி. தவிர புதிய படங்களில் நடிக்க பாரதிக்கு தாராளமான வாய்ப்புகள் வருகின்றன. இதனால்பாலியல் தொழிலாளி வேடத்துக்கு வேறு நடிகையை தேடி வருகிறார்கள்.