Publish Date: Tue, 04 Mar 2008 (20:09 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (20:09 IST)
ஹாலிவுட் இயக்குனர் ரோலண்ட் எமிரிச்சின் புதிய படம் 10,000 B.C. தமிழில் சொல்வதென்றால் கிறிஸ்துவுக்கு முன் பத்தாயிரம் வருடம் (கி.மு. 10,000).
இந்த வாரம் எமிரிச்சின் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இவரது இண்டிபெண்டன்ஸ் டே, காட்சிலா, டே ஆஃப்டர் டுமாரோ படங்கள் தமிழ் ரசிகர்களிடையிலும் பிரசித்தம். அதனால் 10,000 B.C. யை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.
படத்தை தயாரிக்கும் வார்னர் பிரதர்ஸ், ஹன்ஸா பிக்சர்ஸுடன் இணைந்து 10,000 B.C.யை தமிழில் வெளியிடுகிறது. மார்ச் 7 ஆம் தேதி எமிரிச்சின் பிரமாண்டமான படைப்பை தமிழ் ரசிகர்கள் தமிழிலேயே திரையரங்கில் ரசிக்கலாம்.