விநியோகஸ்தர் ஜின்னாவின் ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் சேவல் படத்தில் பரத் ஹீரோ. ஹரி படத்தை இயக்குகிறார்.
இதில் பரத்துக்கு மூன்று வேடங்கள் என்று சொல்லப்பட்டது. நேபாளியில் மூன்று வேடங்களில் பரத் நடித்து வருவதால் சேவல் வேடங்கள் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு மூன்று வேடங்கள் இல்லை, சிட்டிசன் அஜித் போல் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறாராம். சேவல் ஆக்ஷன் படம். எதிரிகளைப் பழிவாங்க இப்படி மூன்று வெவ்வேறு கெட்டப்புகள் போடுகிறாராம் பரத்.
இதில் ஹீரோயினாக நடிக்க மலையாள நடிகை பாமாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதால்¨ கால்ஷீட் இல்லை என்று கைவிரித்திருக்கிறார் பாமா.
இப்போது வேறு ஹீரோயின் தேடி வருகிறார்கள்.