வருடம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரே மன்றம், கமல் நற்பணி இயக்கம். கல்விக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் பல லட்ச ரூபாய் கமல் ரசிகர்கள் செலவிடுகிறார்கள்.
ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு அட்டை, பேனா, பென்சில் போன்ற உதவிகளை இந்த வருடமும் கமல் நற்பணி இயக்கம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முப்பதாயிரம் ஏழைக் குழந்தைகள் இதனால் பயனடைவார்கள்.
இந்த உதவிகளை நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார் கமல். சுமார் எட்டு லட்சம் மதிப்புள்ள உதவிகள் அந்தந்த மாவட்ட தலைமை மன்றங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
நேற்று நடந்த விழாவை கமல் நண்பணி இயக்க தலைவர் குணசேகர் ஏற்பாடு செய்திருந்தார்.