Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் மக்களுக்கு நான் தொண்டன் - விஜய்!

Advertiesment
தமிழ் மக்களுக்கு நான் தொண்டன் - விஜய்!
, திங்கள், 3 மார்ச் 2008 (13:29 IST)
webdunia photoFILE
மன்றத்துக்கு கொடி அறிமுகப்படுத்துவதற்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் விஜய்.

தர்மபுரியில் விஜயின் தங்கை வித்யா நினைவாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு விஜய் பேசினார்.

தங்கை வித்யா இறந்தபோது தனிமைப்பட்டதாக நான் உணர்ந்ததாகவும், நடிகனான பிறகு அது மறைந்ததாகவும் விஜய் கூறினார். தனக்கு வரும் பெரும்பாலான ரசிகர் கடிதங்கள் அன்புள்ள அண்ணா என்றே வருகின்றன என அவர் மேலும் கூறினார்.

இன்று தொடங்கும் பிளஸ் டூ தேர்வில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த விஜய், கல்வி கண் போன்றது, கல்வி இருந்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகைக் காணலாம் என்றார்.

ஈரோட்டில் நடந்த மன்ற விழாவில், விரைவில் மன்றத்திற்கான தனிக்கொடி அறிமுகப்படுத்துவேன் என்று விஜய் கூறியது, பல அரசியல் வதந்திகளை கிளப்பியது. நேற்றைய தர்மபுரி விழாவில் மன்றக் கொடி அறிமுகப்படுத்துவதை உறுதி செய்த விஜய், அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை, தமிழக மக்களுக்கு நான் தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil